Sunday, 28 February 2010

ஸ்ரீ காயத்ரி மந்திரம்


ஸ்ரீ காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

காயத்ரி மந்திரம்:-

"ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை :-

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை...!!!


Post a Comment

11 comments:

sury siva said...

கவி நயா வலைப்பதிவு வழியே தங்கள் பதிவு காண வந்தேன்.
காயத்ரி மந்திரம் பற்றிய தகவல்களை எனது பதிவிலும் இட்டுள்ளேன்.
நேரம் கிடைக்கும்பொழுது வரவும். வாசிக்கவும்.
http://pureaanmeekam.blogspot.com/2007/06/om-bhur-buvaha-suvaha-thath-savithur.html
உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

சுப்பு ரத்தினம்.

தோழி said...

மிக்க நன்றி...

Unknown said...

Very good.. Lots of posts ( Have not read everything ) Very happy to see a soul filled with high energy.. Keep up your searching

தோழி said...

மிக்க நன்றி...

Anonymous said...

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்
என்று குறிபிட்டு உள்ளீர்கள் .அதாவது அந்த ஆதி பராசக்தியே
கிருஷ்ணபகவான் ஆக அவதரித்தார் என்று முடிவுக்கு வரலாமா ?
கீதையில் சொல்லுகிறதா ?

தோழி said...

காயத்திரி அம்மனின் அம்சங்களில் விஷ்ணுவும் உள்ளது... நன்றி..

Vaitheki said...

மந்திரங்களின் மேன்மைகளை துல்லியமாக கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

Muthuraman said...

தாயே! தங்கள் திருப்பணியை சமூக நலனுக்காக தொடர்ந்து செய்ய எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு அணைஹ்த்டு சக்தியையும் தர வேண்டுகிறேன்.
வாழ்த்துக்களுடன் சு. முத்துராமன்

vina said...

very nice..:)

sumathi said...

Dear Thozhi
I am reading your blogs continuosly. Do you know any chance to have this gayathiri manthra in Tamil?. Any Sithar poem has it? IF so, Please share with us

Thanks for your effort

S.Vijayanand "Dimond Distributor" said...

ஒருமுறை ஒரு ஞானயோகி சிவனிடம் சென்று, “உங்கள் பக்தர்கள் மந்திரங்களை ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த உலகத்தில் ஒலி மாசுபாடுதான் அதிகரிக்கிறது. ஒருவர் தான் இருக்கும் நிலையைத் தாண்டி மற்றொரு பரிமாணத்திற்கு செல்ல வேண்டுமென்றால், அனைத்தையும் கடந்து பார்க்கக் கூடிய விழிப்புணர்வு அவருக்கு இருக்க வேண்டும். வெறும் மந்திரங்களை மட்டுமே ஜெபிப்பதால் அவர்களால் எங்கு செல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்களை இந்தப் பைத்தியக்காரத்தனத்தை நிறுத்தச் சொல்கிறீர்களா?” என்றார். அதற்கு சிவன் தரையில் ஊறிக் கொண்டிருந்த ஒரு புழுவைக் காட்டி, “அந்தப் புழுவுக்குப் பக்கத்தில் போய் ‘சிவ ஷம்போ’ என்று சொல்லுங்கள்” என்றார். அந்த ஞானயோகி நம்பிக்கை இல்லாமல் தன் தலையை ஆட்டிக் கொண்டே, புழுவுக்கு அருகில் சென்று சிவ ஷம்போ என்று உச்சரித்தார். உடனே அந்தப் புழு இறந்துபோனது. அதிர்ச்சியடைந்தார் ஞானயோகி. “என்ன இது? நான் மந்திரத்தைச் சொன்னவுடன், அந்தப் புழு இறந்துவிட்டதே,” என்றார். அதற்கு சிவா சிரித்துக் கொண்டே, ஒரு பட்டாம்பூச்சியைக் காட்டி, “அந்த பட்டாம்பூச்சி மீது கவனம் செலுத்திக் கொண்டே சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் அந்தப் பட்டாம்பூச்சியைக் கொல்ல விரும்பவில்லை,” என்றார். அதற்கு சிவா, “முயற்சித்துத்தான் பாருங்களேன்,” என்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்து சிவ ஷம்போ என்றார் ஞானயோகி, அந்த பட்டாம்பூச்சியும் இறந்தது. அதிர்ச்சியுற்ற ஞானயோகி, “இந்த மந்திரம் ஒருவரைக் கொல்லத்தான் செய்கிறதென்றால், ஏன் ஒருவர் இதை உச்சரிக்க வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு சிவா புன்னகைத்துக் கொண்டே, அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு புள்ளிமானைக் காட்டி, “அந்த புள்ளிமானைப் பார்த்து, சிவ ஷம்போ என்று சொல்லுங்கள்” என்றார். ஞானயோகி, “முடியாது. நான் மானைக் கொல்ல விரும்பவில்லை” என்றார். அதற்கு சிவா, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது. மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். ஞானயோகியும் சிவ ஷம்போ என்று சொன்னவுடன், மான் இறந்து விழுந்தது. வாயடைத்துப் போன ஞானயோகி, “இந்த மந்திரத்தின் பயன்தான் என்ன? இது அனைவரையும் கொல்வதற்காகத்தான் இருக்கிறது,” என்றார். அப்போது ஒரு தாய் தனக்குப் புதிதாகப் பிறந்த ஒரு பச்சிளம் குழந்தையுடன் சிவனின் அருள் பெறுவதற்காக அங்கே வந்தார். சிவா ஞானயோகியைப் பார்த்து, “இந்தக் குழந்தையைப் பார்த்து அந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்” என்றார். அதற்கு ஞானயோகி, “முடியாது. நான் இந்தக் குழந்தையைக் கொல்ல விரும்பவில்லை” என்று மறுத்தார். சிவா அவரை சொல்லுமாறு வற்புறுத்தவே, ஞானயோகி மிகுந்த தயக்கத்துடன் அந்தக் குழந்தையை அணுகி, சிவ ஷம்போ என்றார். உடனே அந்தக் குழந்தை எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தது. அது, “நான் வெறும் ஒரு புழுவாகத்தான் இருந்தேன். நீங்கள் சொன்ன ஒரு மந்திரத்தால் பட்டாம்பூச்சியாக மாறினேன். இன்னொரு மந்திரத்தால் நீங்கள் என்னை ஒரு மானாக மாற்றினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால் ஒரு மனிதனாகவும் மாற்றிவிட்டீர்கள். தயவு செய்து இன்னும் ஒரே ஒரு முறை நீங்கள் அந்த மந்திரத்தை உச்சரியுங்கள்; நான் தெய்வீகத் தன்மையை அடைய விரும்புகிறேன்,” என்றது. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே சக்திகளின் அதிர்வுகள்தான் என்று நவீன விஞ்ஞானம் தெள்ளத் தெளிவாக நிரூபித்துவிட்டது. எங்கு ஒரு அதிர்வு இருக்கிறதோ, அங்கு ஒரு ஒலியும் இருக்கவேண்டும். அதனால்தான் நாம் யோகாவில், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஒரே ஒரு ஒலிதான் என்று சொல்கிறோம். அது நாதப்பிரம்மம் என்று அழைக்கப்படுகிறது.

Read more at : பலன் தரும் மந்திரங்கள்… http://tamilblog.ishafoundation.org/palan-tharum-mandirangal/

Post a Comment