வெண் தாமரை மலர்
தாவரவியற் பெயர் :- Nelumbium Alba
மலரின் பண்பு
நீரில் விளையும் மலர். இலைக்காம்பு பூக்காம்பை விட அதிக நீளமாகும். பூ மருத்துவ குணமுடையது. காம்புகள் துவர்ப்பும் குளிர்ச்சியும் உடையவை.
இந்தப்பூ வெப்பத்தால் பிறந்த விழி எரிச்சலை, ஜுரத்தைப் போக்கும். ஆண்மையின்மையை நீக்கும். இரத்தக்கொதிப்பை அகற்றும். மூளைக்குப் பலம் சேர்க்கும்.
வெண்தாமரை வேர்க்கட்டுள்ள கிழங்கிலிருந்து நேராக வளரும் நீர்க்கொடி. வட்டமான பெரிய இலைகளை நீர்ப்பரப்பில் பெற்றிருக்கும். பெரிய மலர்களை உடையது. வெண்ணிற மலர்கள்.
பலன்
வெண்தாமரையைக் கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமது தெய்வீக உணர்வு மேம்படும். மேனி பொலிவடையும். மனதில் உள்ள மாசுக்கள் அகன்று விடும். பெருமிதப்படுகின்ற வண்ணம் ஆற்றல் பெறுவோம்.
படியுங்கள், பயன்படுத்துங்கள், பயனடையுங்கள்..!!
எல்லாம் இறைவன் அருள்.
Post a Comment
4 comments:
பயனுள்ள ஆன்மீக தகவல்.
மிக்க நன்றி தோழா
இந்த பூவை எப்படி உபயொகிப்பது தோழி?
இறைவனை பூஜிக்க மற்ற பூக்களை எப்படி பயன் படுத்துவீர்களோ அப்படி தான் தோழா..
Post a Comment