திருநீறு
திருநீறு இந்துசமயத்தின் சிறந்த பிரசாதங்களில் முதன்மைவகிப்பதாகும். இது சமயத்தின் தோற்ற ஒழுக்க முறையுண்மைகளும் கிராமததுவங்கட்கும், முப்பொருள் உண்மைக்கும் அறிகுறியாய் அமைவது. மூன்று விரல்களால் இடப்படும் திருநீற்றின் மூன்று கோடுகளும் சிந்தனை , சொல், செயல் என்ற திரிசத்தியங்களைக் கூறுகின்றது. முடிவில் யாவரும் சாம்பல் ஆவர் என்ற நிலையான உண்மையை திருநீறு உணர்த்துகின்றது. மேலும் தூய்மையும் வெண்மையுமான நீறு போல் நமது உள்ளம் தூய்மையாகவும் ஞான ஒளி உடையதுமாக இருத்தல் வேண்டும் என்பதையும் காட்டுகின்றது.
பசுவின் (ஜீவனின்) மலமாம் ஆணவம், கன்மம், மாயை என்ற தீயில் (ஞானத்தீயில்) நீறுகின்றன என்ற தத்துவத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. இதை ஒட்டியே சம்பந்தபெருமாள்...
"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே... "
என அருளியுள்ளார்.
"நீறில்லா நேற்றி பாழ்" என்பது பழமொழி. சாணம் அசுத்தங்களையும் நோய் கிருமிகளையும் அகற்றும் என்பது யாவரும் அறிவர். சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு தலையில் உள்ள நீர்க்கட்டு, தலைவலி, உடம்பிலுள்ளகிருமிகள் முதலியவற்றை அகற்ற வல்லது.
திருநீறு அணியும் போது வடக்கு முகமாகவோ கிழக்கு முகமாகவோ அண்ணாந்து "சிவ சிவ" என்று சொல்லிக்கொண்டு அணிய வேண்டும்.திருநீற்றுக்கு வீபூதி, இரட்சை, சாரம், பசிதம் என்பன மறு பெயர்களாகும்.
உருத்திராக்கம்
உருத்திர + அக்கம் = உருத்திர மூர்த்தியாகிய சிவபெருமானின் திரு நேத்திரங்களில் தோன்றிய கண்மணிகள் என்பது பொருள். திரிபுரத்து அசுரர் செய்த கொடுமைகளை தேவர்கள் சிவபெருமானிடம் சொன்ன போது அவரின் திரி நேத்திரங்களில் இருந்து ஒழுகிய நீர்த்துளிகள்.
இதனை கண்மணி மாலை, திரு அடையாள மாலை அக்கு மணி என்றெல்லாம் அழைப்பர். அக்குமாலை இறைவன் தன பக்தர்கள் மீது வைத்த கருணையால் அவர்கட்கு எதிரிகள் கொடுக்கும் துன்பங்களை வடித்த கண்ணீரின் தொகுப்பு.திரவநிலையில் இருந்து, திடமான அமைப்பாய் அக்குமணி ஆனதேன்பர்.
நல்ல உத்திராக்கம் பசும்பொன்னின் நிறத்தை ஒத்திருப்பதை காணலாம். இது சிவபெருமானின் அருளைக்குறிப்பதால்மாலையாக அணிந்து ஜெபித்தால் தெய்வசக்தி வளரும். உருத்திராக்கம் உடலில் அணிவதால் இரத்தக்கொதிப்பு முதலிய நோய்கள் நீங்கும்.
"ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு "
Post a Comment
3 comments:
நல்ல பகிர்வு.. நன்றி....
மிக்க நன்றி
very important news for hindu devottees
Post a Comment