Showing posts with label துளசி. Show all posts
Showing posts with label துளசி. Show all posts

Monday, 6 June 2011

துளசீகவசம்..




துளசீ ஸ்ரீ மகாதேவி நம: பங்கஜதாரிணி
சிரோ மே துளசீ பாது பாலம் பாது யஸஸ்வினி

த்ருஷெள மே பத்மநயனா ஸ்ரீசகீ ச்ரவணே மம
க்ராணம் பாது சுகந்தா மே முகம் ச சுமுகீ மம

ஜிஹ்வாமே பாது சுபதா கண்டம் வித்யா மயீ மம
ஸ்கந்தௌ கல்ஹாரிணி பாது ஹ்ருதயம் விஹ்ணுவல்லபா

புண்யதா மே பாது மத்யாம் நாபிம் ஸெளபாக்யதாயினி
கடிம் குண்டலினி பாது ஊரு நாரதவந்திதா

ஜனனீ ஜானுனீ பாது ஜங்கே சகலவந்திதா
நாராயணப்ரியா பாதௌ ஸர்வாங்கம் சர்வரக்ஷணீ

சங்கடே விஷமே துர்கே பயே வாதே மஹாஹவே
நித்யம் ஹி சந்த்யயோ பாது துளசீ ஸர்வத ஸ்தா

இதீதம் பரமம் குஹ்யம் துளஸ்யா கவசாமிருதம்
மர்த்யாநாம மிருதார்த்தாய பீதாநாம் அபயாயச:

மோக்ஷாய சமுமுக்ஷீணாம் த்யாயினாம் தியான யோக க்ருத்
வஸ்ய வஸ்ய காமானாம் வித்யாயை வேத வாதினாம்.

த்ரவீணாய தரித்ராணாம் பாபினாம் பாப சாந்தயே
அன்னாய க்ஷீதிதானஞ்ச ஸ்வர்காய ஸ்வர்க்க மிச்சதாம்.

பஸவ்யம் பஸுகாமானாம் புத்ரதம்புத்ர காங்க்ஷிணாம்
ராஜ்யாய ப்ரஷ்டா ராஜ்யானாம் மஸாந் தானாஞ்ச ஸாந்தமே.

பக்த்யர்த்தம் விஷ்ணுபக்தானாம் விஷ்ணௌ ஸர்வாந்த ராத்மநி
ஜாப்யம் த்ரிவர்க்க ஸித்யர்த்தம் க்ருஹஸ்தேன விசேஷத:

உத்யம் தம்சூர்ய கிரணமுபஸ்த்தாய கிருதாஞ்சலி:
துலஸிகாந நேதிஷ்டான் ஆஸினோவா ஜபேதி தம்.

ஸர்வான் காமான் அவாப்னோதி ததைவ மம ஸந்நிதம்
மமப்ரியகரம் நித்யம் ஹரிபக்தி விவர்தனம்.

யாஸ்யான் ம்ருதப்ரஜா நாரி தஸ்யா அங்கம் ப்ரமார்ஜயேத்
ஸபுத்ரம் லபதே தீர்க்க ஜீவினம் சாப்ய ரோகிணம்.

வந்த்யாய மார்ஜயே தங்கம் குஸைர் மந்த்ரேண ஸாதக:
ஸாபி ஸம்வத்சரே தேவ கர்ப்பம் தத்தே மனோஹரம்.

அஸ்வத்தே ராஜவஸ்யார்த்தி ஜலேதக்னேஸ்ஸுருபபர்க:
பலாஸமூலே வித்யார்த்தி தே ஜோர்த்தியமு கோரவே.

கன்யார்த்தி சண்டிகா கேஹே ஸத்ரு ஹத்யை க்ருஹேமம:
ஷ்ரீகாமோ விஷ்ணு கேஹேச உத்யானே ஸ்திரீ வஸாபேத்.

கிமத்ர பஹுநோக்தேன ஸருணுஸைன் யேஸதத்வத:
யம்யம் காம மபித்யாயே தத்தம் ப்ராப் னோத்ய ஸம்ஸயம்.

மமகேஹ கதஸ்த்வம்து த்ராகஸ்ய வதேச்சயா
ஜபன் ஸ்தோத்ரஞ்ச கவசம் துலஸீகத மானஸ:

மண்டலாத் தாரகம் ஹமதா
பிஷ்யசி ந ஸம்ஸய:

துளசீகவசம் சம்பூர்ணம்..




Wednesday, 23 June 2010

துளசி தீர்த்தம்...




இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.

மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.

துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.

ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

துளசியின் தாவர வியற் பெயர் Ocimum sanctum இது Labiatae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.