Monday 8 November 2010

பிறருக்கு நீ செய்வது..

ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டே போகும் போது..

அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும், உண்மையாகவும் பழகுவதில்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல் தடுக்கியது. உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.

அப்போது துறவி அவன் தோளில் தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.

உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.

அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.


Thursday 4 November 2010

இனிய தீபத் திருநாளில்..


தீபாவளிக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன..

எண்ணெய் - மகா லட்சுமி.
சியாக்காய் - சரஸ்வதி.
சந்தானம் - பூமாதேவி.
குங்குமம் - கௌரி.
மலர்களில் - ஜீவாத்மா.
தண்ணீர் - கங்கா தேவி.
இனிப்பு பலகாரம் - தன்வந்திரி.
தீபம் - பரமாத்மா.
புத்தாடை - மகாவிஷ்ணு.

புத்தாடை அணியும் போது...

"தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம்நமோ நாராயணாய வாசுதேவாய ஓம் நமசிவாய||"

என்ற சுலோகத்தை மூன்று முறை சொல்லி மகா விஷ்ணுவை வணங்கி புத்தாடை அணிய வேண்டும்..

தீபம்ஏற்றும்போது...

"ஸுவர்ண வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ"

என்ற சுலோகத்தை
மூன்று முறை சொல்லி பக்தியுடன் வழிபட வேண்டும்..



நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்