Friday, 19 February 2010

துக்க நிவாரண அஷ்டகம்...

மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே
கங்கண பாணியன் களிமுகம் கொண்டநல் கற்பகக் காமினியே
ஜெயஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

கான் உறுமலர் எனக் கதிர் ஒளிகாட்டிக் காத்திட வந்திடுவாள்
தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்
மான் ஊறு லிழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில்வடிவுடனே எழுந்தநல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

தணதண தந்தண தவில் ஒலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே
சங்கடம் தீர்த்திடச் சமர் அது செய்தநல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுபாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

ஜெயஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீ தேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீ பரமேஸ்வரி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெயஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கௌரி கிருபாகரி துக்க நிவாரணி காமாஷி.

துக்க நிவாரண அஷ்டகம் முற்றும்.....

Post a Comment

4 comments:

Molagaa said...

அஷ்டகம் பாடலாக இருகிறதா தர்ஷினி , இருந்தால் தர முடியுமா...?

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் Sreemath Pamban Swamigal -- chaarvi said...

ஸ்ரீஸ்ரீஸ்ரீ துர்க்கைச் சித்தர் அருளிய இந்தப்பாடல் மிக சிறப்பு மிக்கது

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் Sreemath Pamban Swamigal -- chaarvi said...

ஸ்ரீஸ்ரீஸ்ரீ துர்க்கைச் சித்தர் அருளிய இந்தப்பாடல் மிக சிறப்பு மிக்கது

PAATTIVAITHIYAM said...

உங்கள் தளத்திற்கு முதன்முறையாக இன்று தான் வந்துள்ளேன். இளம் வயதில் ஆன்மீகத்தில் இவ்வளவு நாட்டமுடன் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.

Post a Comment