ஒரு பணக்காரன் வந்து குருவிடம் கேட்டான். 'ஸ்வாமி' சொர்க்கத்திற்குச் செல்ல ஒரு வழி கூறுங்கள்!' குரு சொன்னார் 'தினமும் தர்மம் செய்து வா.' ஒரு வாரம் கழித்து அவன் வந்து தான் தினமும் ஒரு கைபிடி அரிசி தர்மம் செய்து வருவதாகவும், தான் சொர்க்கத்திற்குச் செல்வது உறுதி தானே எனவும் கேட்டான். அதற்கு அவர் ஒன்றும் சொல்லாமல் மெளனமாக தோட்டத்திற்குச் சென்று மரத்தின் அடிபாகத்தை தன் நகத்தால் கீற ஆரம்பித்தார்.
அவர் என்ன செய்கிறார், எதாற்காக செய்கிறார் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் கடைசியில் பொறுமை இழந்து அவரிடமே கேட்டு விட்டான். அவர் சொன்னார், 'இப்படி நகத்தால் கீறியே இந்த மரத்தை சாய்க்க போகிறேன்'. அவருடைய செய்கை பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தாலும் பணிவோடு 'ஸ்வாமி, இது நடக்கக் கூடிய காரியமா!?' எனக் கேட்டான்.
'ஒரு கைப்பிடி அரிசியை தர்மம் செய்து மோட்சத்தைப் பெற முடியுமானால், கையால் கீறி இந்த மரத்தைச் சாய்க்க முடியாதா?' அப்பொழுது தான் அவனுக்கு தன் தவறு புரிந்தது. தன் சொத்து முழுவதையுமே ஊர் மக்களுக்குக் கொடுத்து விட்டு அவருடைய சீடனாக ஆசிரமத்திலேயே தங்கி விட்டான்.
Post a Comment
3 comments:
அருமை...
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்.
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்...
எனும் பாரதி யின் வார்த்தைகள்
வெறும் வாய்வார்த்தைகளாகவே நின்று போயின.
சுரங்கம் வேண்டுபவன்
சுரண்டித் திளைப்பவனும்
சுவர்க்கம் நினைக்கலாமோ !!
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
நண்றி
Post a Comment