சண்டேசுவரர்...
ஆலய வழிபாடு சண்டேசுவரர்(ரி) வழிபாடுடன் நிறைவு பெறுகிறது. நமது ஆத்மார்த்த பூஜைகளிலும் இந்த வழிபாடே பூஜை முடிவில் செய்யப் படுகின்றது.
சண்டேசுவர் சந்நிதி கர்ப்பகிரகத்தின் இடப்பக்கத்தில் சிறியதோர் இடைவெளி விட்டு அமைக்கப் பட்டிருக்கும். மூலவருக்கு சாத்திய மாலையும், நைவேத்தியமுமே இங்கு பூஜைக்கு உரியவையாகின்றன.
சண்டேசுவரரை(ரி), சண்டிகேசுவரர்(ரி) என்றும் அழைப்பர். இவர் இறைவன் திருவருள் பெற்ற அடியார். எப்போதும் இறைவனின் தியானத்திலேயே அமர்ந்திருப்பவர். இதனால் இவரை நேர்முகப்படுத்தி அருள் பெறுவதற்க்கு இவர் சந்நிதிமுன் மூம்முறை கைத்தாளம் (கைதட்டி) இட்டு இறை தரிசனத்தின் பலனை தருமாறு வேண்டுகிறோம்.
சிலர் சண்டேசுவரர்(ரி) சந்நிதியில் தாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளில் நூல் எடுத்து போடுவது வழக்கமாகக் காணப்படுகிறது. சிலர் அறியாமையாலும், சிலர் மற்றவர் செய்வதைப் பார்த்து செய்யும் பழக்கத்தாலும் உருவாகிய இந்த தவறான செயலை அறவே அகற்றுதல் வேண்டும்.

Post a Comment
2 comments:
//இவரை நேர்முகப்படுத்தி அருள் பெறுவதற்க்கு இவர் சந்நிதிமுன் மூம்முறை கைத்தாளம் (கைதட்டி) இட்டு இறை தரிசனத்தின் பலனை தருமாறு வேண்டுகிறோம்.//
மூன்று முறை கை தட்டி வணக்குவதற்கு காரணம், ”நான் இதய சுத்தியோட கடவுலை வணங்க வந்திருக்கிறேன், ஆலயத்திலிருந்து எந்தையும் எடுத்துச் செல்லவில்லை” என்று சொல்வதற்காக என்று ஒரு கோவில் பூசாரி சொன்னார், அது தவறான தகவலா...?.
பொதுவாக குழந்தைகளையும், பெரியவர்களையும் சந்திக்க செல்லும் பொது கையில் ஏதும் பொருட்களை அவர்களுக்கு என்று எடுத்து செல்வது வழக்கம். அது போல கோவில்களுக்கு செல்லும் போதும் வெறுங்கையுடன் செல்லாமல் கோவிலுக்கு தேவையான பொருட்கள் ஏதும் எடுத்து செல்லல் வேண்டும். அத்துடன் கோவிலில் இருந்து வீடு செல்லும் போது தெய்வ பிரசாதங்கலான திருநீறு, நைவேத்தியங்கள் போன்றவை எடுத்து செல்லல் வேண்டும் அது நம்மையும், நமது வீட்டையும், நாம் வாழும் சூழலையும் தூய்மையாக்கும். ஆகவே, "கோவிலில் இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை" என்று சொல்வதற்காக மூன்று முறை கை தட்டி வணங்குவது என்பது ஏற்புடையதல்ல. நன்றி.
Post a Comment