Sunday, 4 July 2010

நமஸ்காரங்கள்...

நமஸ்காரம் என்பது அஷ்டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம், திரியங்க நமஸ்காரம், ஏகாங்க நமஸ்காரம் என்று நான்கு வகைப்படும். இறைவனை நமஸ்காரம் செய்வதால் எல்லாப் பாவங்களும் தீர்ந்து சிவ கடாட்சம் கிட்டும் என்பது ஐதீகம்.

அஷ்டாங்க நமஸ்காரம்

மார்பு, தலை, நெற்றி, இரு கால்கள், இரு புஜங்கள், கைகள், இவைகள் நிலத்தில் படும் படி படியாக செய்யும் நமஸ்காரம் அஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

பஞ்சாங்க நமஸ்காரம்

தலை, இரு கைகள், இரு முழங்கால்கள், இவைகள் நிலத்தில் படும் படி படியாக செய்யும் நமஸ்காரம் பஞ்சாங்க நமஸ்காரம் எனப்படும்.

திரியங்க நமஸ்காரம்

இருகரங்களையும் தலைக்குமேல் கூப்பி தலை வணங்கி செய்யும் நமஸ்காரம் திரியங்க நமஸ்காரம் எனப்படும்.

ஏகாங்க நமஸ்காரம்

தலையை மாத்திரம் தாழ்த்தி வணங்குவது ஏகாங்க நமஸ்காரம் எனப்படும்.



Post a Comment

6 comments:

chandru2110 said...

நல்ல விஷயம் .

jagadeesh said...

அருமை!

sury siva said...

ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்வது
பாரம்பரியமாக வழி வழியாக நமது நாட்டில் உள்ளது .

சுப்பு ரத்தினம்.

MACHAMUNI BLOGSPOT said...

அருமை தோழி அவர்களே,
அனைத்துக் கட்டுரைகளும் அருமை.
நான் எழுத வேண்டும் என நினைத்திருந்தவைகள் பெரும்பாலானவை பற்றி தாங்கள் எழுதிவிட்டீர்கள்.எனது பாணியில் விடுபட்டுப் போனவை மட்டும் எழுத எண்ணியுள்ளேன்.
நன்றி
இப்படிக்கு
சாமீ அழகப்பன்

Unknown said...

Thank you for posting these valuable sights. Why dont post small manthras? that will be very useful to teach children

Unknown said...

Thank you very much for posting these valuable posts.please post small slokam for children

Post a Comment