Friday, 25 June 2010

குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா?

மகான் ஒருவரிடம் வந்த பக்தன் ஒருவன் அவரிடம், "குருவின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாதா? குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை தானா? என்று கேட்டான்.

அதற்க்கு அந்த மகான் அவனிடம், "ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா" என்றார். அந்த பக்தனும் ஒரு வாளிநிறைய தண்ணீரைக் கொண்டுவந்து மகான் முன் வைத்தான். மகான் பக்கத்தில் இருந்த இரும்புத்துண்டை எடுத்து வாளியில் போட்டார். இரும்புத்துண்டு நீரில் மூழ்கியது. வாளியில் மூழ்கிய இரும்புத் துண்டை எடுக்க சொன்னார். அவன் எடுத்ததும்,

பக்கத்திலிருந்த சிறு மரப்பலகை துண்டை எடுத்து வாளி நீரில் போட்டார். அது மிதந்தது. அதன் மேல் இரும்புத் துண்டை வைக்க சொன்னார். பக்தனும் மரத்துண்டின் மேல் இரும்புத்துண்டை வைத்தான். இப்போது மரப்பலகையானது இரும்புத்துண்டை தாங்கிக்கொண்டு மிதந்தது.

அப்போது பக்தனை நோக்கி மகான் சொன்னார், " இந்த வாளி நீர் தான் பிறவிக்கடல், அதை கடக்க விரும்புபவர்கள் இந்த இரும்புத்துண்டு, பிறவிக் கடலை கடக்க தானாக முயற்சி செய்பவர்கள் மூழ்கிவிடுவார்கள், ஒரு நல்ல குருவின், அருளும், வழிகாட்டலும் இந்த மரப்பலகை போன்றது, இதன் ஆதாரத்தில் பிறவிக்கடலை கடக்க முயல்பவர்கள் இலகுவாக கடந்து விடலாம்" என்றார்.

உண்மையை உணர்ந்த பக்தன் மாகானின் பாதங்களை வீழ்ந்து வணங்கி சரணடைந்தான்.



Post a Comment

15 comments:

தமிழ் அமுதன் said...

நல்ல உதாரண கதை..! நன்றி..!

Unknown said...

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் குருவை அடையாளம் கானுவது எப்படி?

அந்த காலத்தில் அதிகமான ரிஷிகளும் முனிகளும் இருந்தார்கள்./.. ஆனால் கலி காலமான இப்போது... அப்படிப்பட்ட உண்மை ஞானிகளை அடையாளம் காணுவது எப்படி?

குருவை நாமாக தேடக்கூடாது குருதான் தம்மை தேடிவர வேண்டும் என்று இருப்பது சரிதானா?

Ashok D said...

நல்ல பதிவு தோழி... ஆனால் குருவை கண்டடைவதும் கடினமான வழியே ...

chandru2110 said...

இது போன்று கதை கேட்டு ரொம்ப நாள் ஆகுது தோழி. பழைய நினைவுகள் நினைவுக்கு வருது .

sury siva said...

அருமையான உதாரணம்.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

தோழி said...

@ SIVANARUL...

நோய் உள்ளவர் தான் மருத்துவரை நாடி செல்ல வேண்டும் , அது போல குரு என்பவர் யாரையும் தேடிவரமாட்டார். ஆன்மீக தேடல் உள்ளவர்கள் தான் தேடி கண்டடைய வேண்டும். உங்கள் தேடல் எது என்று தெளிவாக முடிவு செய்து அதற்க்கான குருவை தேடுங்கள். நிட்சயம் கிடைப்பார் வாழ்த்துக்கள்...

Molagaa said...

உன் பாதம் பணிந்தேன் ...என்னை நான் மறந்தேன் ,
ஸ்ரீ குரு பாதம் சரணம் ,
அருமை....அருமை அருமையான விளக்கம் ,

S.Puvi said...

நல்ல கருத்துக்கள் தோழி அவர்களே!

Piththa_ Piraisoodi said...

தாகித்தவனை தேடி தன்னீர் அலைகிறது

AND KRISHNAMOORTHY said...

ஞானகுருவைத் தேடி அலையும் ஜீவன்!!!
காணக் கிடைக்குமா? பிராப்தமோ?
எப்போது? எங்கே? யாமறியோம் பராபரமே!!!

Unknown said...

Very good explanation.

SANTHOSH said...

very goog story

rekha said...

very nice

rekha said...

nice

prem said...

good ex..............


Post a Comment