Sunday, 28 February 2010

ஸ்ரீ காயத்ரி மந்திரம்


ஸ்ரீ காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

"வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.

காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.

வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

காயத்ரி மந்திரம்:-

"ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

"யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக' என்பது இதன் பொருள்.

நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை :-

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை...!!!

பூஜைக்குரிய மலர்கள் - 03



ரோஜா
தாவரவியற் பெயர் :- Rosa damascena.

சரணாகதி என்பது இறைவனிடம் தன்னையே ஒப்புவித்துக் கொண்டு விடுவது.

இந்த உடம்பு ஈசனின் உறைவிடம்(ஆலயம்) என்பதை உணர்ந்து விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

ரோஜா எந்த நிறத்தில் இருந்தாலும் அழகானது தான், அதன் மணம் எந்த அளவில் இருந்தாலும் அது இறைவனின் அன்பை எமக்குப் பெற்றுத்தரும்.

இளஞ்சிவப்பு ரோஜா

இளஞ்சிவப்பு ரோஜா கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமக்கு நல்லது, கேட்டது நமக்கு புலனாகும். நிறைகள் வளரும், குறைகள் அகன்றுவிடும்.

வெள்ளை ரோஜா

வேலை தேடுவோருக்கு நேர்முக தேர்வில் வெற்றி பெறுவோமா என்ற அச்சம். வேலை சரியில்லை என்ற கிரக பயம். வறுமை பயம், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியுமோ என்ற பயம். எதிலும் அச்சம், எப்பொதும் அச்சம் மீள வழியே இல்லையா என்று வேதனைபடுபவர்கள், வெள்ளை ரோஜாக்களால் இறைவனை வழிபட அச்சம் பறந்தோடும் , தைரியம் கொடிகட்டும், பகைவரும் நண்பராவர்.

வெள்ளை ரோஜாவின் தன்மை அப்படி. அது இனிமையானது தன்னம்பிக்கை அழிப்பது.

மஞ்சள் ரோஜா

தொலைந்து போன நிம்மதியை திரும்ப பெற வேண்டுமா? ரோஜாவை இறைவனுக்கு சமர்ப்பியுங்கள்.

பொறாமை, பகைமை, காரணமாக மனதில் ஏற்படும் நெருடலில் குடும்ப மகிழ்ச்சி காணாமல் போய்விடும். குரோதம் தொலைந்து கணவன், மனைவி குதூகலத்துடன் வாழ்ந்திட ரோஜா கொண்டு இறைவனை வணங்க வேண்டும்.


சிவப்பு ரோஜா

இந்துக்கள் ஊழ்வினையில் நம்பிக்கை உள்ளவர்கள், இன்றைய துன்பம் நேற்றைய தவறுகளின் விளைவு என்று எண்ணுவோம், வாழ்வின் கர்மவினைகள் நீங்கி விட்டால் நாம் புது மனிதராவோம், நமது வாழ்வும் புது வாழ்க்கை ஆகிவிடும்.கர்ம வினைகளில் நம்பிக்கை உடையவர்கள். சிவப்பு ரோஜா கொண்டு இறைவனை அர்ச்சிக்க, கர்மவினைகள் நீங்கி பேரானந்தம் வந்தடையும்.


படியுங்கள், பயன்படுத்துங்கள், பயனடையுங்கள்..!!

எல்லாம் இறைவன் அருள்.

விசிஷ்டாத்வைதம் நிறுவிய ராமானுஜர்.


சங்கரருக்குப் பின்னால் அவதரித்தவர் ‘ராமானுஜர். இவர் விசிஷ்டாத்வைதம்’ என்ற சித்தாந்தத்தை நிறுவினார். ‘உலகம் மாயை! பிரம்மம் ஒன்றே சத்தியமானது’ என்பது அத்வைத சித்தாந்தம் அதில் சில மாறுபாடுகளைக் கொண்டது விசிஷ்டாத்வைதம். ‘திருமாலே முழுமுதற் கடவுள் என்று போதித்தார் ராமானுஜர். இவர் வைணவத்துக்கு ஆற்றிய திருத்தொண்டுகள் மகத்தானவை.

ஆதியில், ‘தேவலர்கள் என்ற அந்தணப் பிரிவினர் மட்டுமே, விஷ்ணு ஆலயங்களில் அர்ச்சகர்களாக இருந்தனர். அவர்கள் அவசியம் செய்துகொள்ள வேண்டிய ‘பஞ்ச சம்ஸ்காரம்’ என்னும் வைணவ தீக்கையை, திருமாலடியார்கள் அனைவர்க்கும் பொதுவாக்கினார் ராமானுஜர். ‘நாராயண நாமத்தைச் சொன்னால் எவருக்கும் வைகுண்டம் உண்டு’ என்று திருக்கோஷ்டியூர் விமானத்தில் ஏறி நின்று, உலகத்தோர் அனைவர்க்கும் உபதேசித்த கருணையாளர் ராமானுஜர்.