Tuesday, 23 August 2011

எது சிறந்த பக்தி?

துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன். ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.

காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.

ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர். இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.

ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.

"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான். அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர். மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.

வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான். அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார். "இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.

"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.

சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான். உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.

பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன். தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.



Saturday, 16 July 2011

ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம்.


ஸூமநஸ வந்தித ஸூந்தரி மாதவி
சந்த்ர சகோதரி ஹேமமயே
முநிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி
மஞ்சுள பாக்ஷிணி வேதநுதே
பங்கஜ வாஸினி தேவஸூ பூஜித
ஸத்குண வர்ஷினி சாந்தியுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஆதிலெக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஐகலி கல்மஷ நாசினி காமினி
வைதிக ரூபிணி வேதமயே
க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி
மந்த்ர நிவாஸினி மந்த்ரநுதே
மங்கள தாயிணி அம்புஜ வாஷினி
தேவ கணார்ச்சித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தான்யலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஜயவர வர்னினி வைஷ்ணவி பார்கவி
மந்த்ர ஸ்வரூபிணி மந்த்ரமயே
ஸூரகண பூஜிய சீக்ர பலப்ரத
ஞான விகாஸினி சாஸ்த்ர நுதே
பவபய ஹாரிணி பாப விமோசனி
சாது ஜநாச்ரித பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
தைர்யலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ஜய ஜய துர்கதி நாசினி காமினி
சர்வ பலப்ரத சாஸ்த்ரமயே
ரதகஜ துர்க பதாதி சமானுத
பரிஜன மண்டித லோகநுதே
ஹரிஹர ப்ரம்ம ஸூபூஜித சேவித
தாப நிவாரிணி பாதயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஸ்ரீ கஜலக்ஷ்மி பாலயமாம்.

அயிகக வாஹினி மோஹினி சக்ரிணி
ராக விவர்த்தினி ஞானமயே
குணகண வாரிதி லோக ஹிதைஷினி
ஸப்த ஸ்வர வர கானனுதே
சகல ஸூராஸூர தேவ முநீஸ்வர
மாநவ வந்தித பாத யுதே
ஜெய ஜெய ஹே மது ஸூதன காமினி
சந்தான் லக்ஷ்மி பாலயமாம்.

ஜய கமலாசனி சத்கதி தாயினி
ஞான விகாஸினி கானமயே
அனுதின மர்ச்சித குங்கும தூசர
பூஷித வாஸித வாத்ய நுதே
கனகதாரா ஸ்துதி வைபவ வந்தித
சங்கர தேசித மான்யபதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
விஜயலக்ஷ்மி ஜெய பாலயமாம்.

ப்ரணத ஸூரேஸ்வரி பாரதி பார்கவி
சோக விநாசினி ரத்னமயே
மணிமய பூக்ஷித கர்ண விபூஷண
சாந்தி ஸமாவ்ருத ஹாஸ்யமுகே
நவநிதி தாயினி கலிமல ஹாரிணி
காமித பலப்ரத ஹஸ்தயுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
வித்யாலக்ஷ்மி பாலயமாம்.

திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸூ பூர்ண மயே
கும கும குங்கும் குங்கும் குங்கும்
சங்க நிநாத ஸூவாத் ய நுதே
வேத புராணே திஹாச ஸூ பூஜித
வைதிக மார்க ப்ரதச்ச யுதே
ஜெய ஜெய ஹே மதுஸூதன காமினி
ஸ்ரீ தனலக்ஷ்மி பாலயமாம்.

இதி ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் சம்பூர்ணம்.


Friday, 1 July 2011

ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம்.


ஸரஸ்வதீ மஹாபத்ரா மஹாமாயா வரப்ரதா
ஸ்ரீப்ரதா பத்மநிலயா பத்மாக்ஷி பத்மவக்த்ரகா
ஸிவாநுஜா புஸ்தகப்ருத் ஜ்ஞாநமுத்ரா ரமாபரா
காமரூபா மஹாவித்யா மஹாபாதக நாஸிநீ.

மஹாஸ்ரயா மாலிநீ ச மஹாபோகா மஹாபுஜா
மஹாபாகா மஹோத்ஸாஹா திவ்யாங்கா ஸுரவந்திதா
மஹாகாளீ மஹாபாஸா மஹாகாரா மஹாங்குஸா
பீதாச விமலா விஸ்வா வித்யுந்மாலா ச வைஷ்ணவி.

சந்த்ரிகா சந்த்ரவதநா சந்த்ரலேகா விபூஷிதா
ஸாவித்ரீ ஸுரஸாதேவீ திவ்யாலங்கார பூஷிதா
வாக்தேவி வஸுதா தீவ்ரா மஹாபத்ரா மஹாபலா
போகதா பாரதீ பாமா கோவிந்தா கோமதீ ஸிவா.

ஜடிலா விந்த்யவாஸா ச விந்த்யாசல விராஜிதா
சண்டிகா வைஷ்ணவி ப்ராஹ்மீ ப்ரஹ்மஜ்ஞாநைக ஸாதநா
ஸௌதாமிநீ ஸுதா மூர்த்தி ஸுபத்ரா ஸுரபூஜிதா
ஸுவாசிநீ ஸுநாஸாச விநித்ரா பத்மலோசநா.

வித்யாரூபா விஸாலாக்ஷீ ப்ரஹ்மஜாயா மஹாபலா
த்ரயீமூர்த்திஸ் த்ரிகாலஜ்ஞா த்ரிகுணா ஸாஸ்த்ரரூபிணீ
ஸும்பாஸுர ப்ரமதிநீ ஸுபதாச ஸ்வராத்மிகா
ரக்தபீஜநிஹந்த்ரீச சாமுண்டா சாம்பிகா ததா.

முண்டகாய ப்ரஹரணா தூம்ரலோசந மர்தநா
ஸர்வதேவாஸ்துதா ஸௌம்யா ஸுராஸுர நமஸ்க்ருதா
காளராத்ரீ கலாதாரா ரூபஸௌபாக்ய தாயீநீ
வாக்தேவீ ச வராரோஹா வாராஹீ வாரிஜாஸநா.

சித்ராம்பரா சித்ரகந்தா சித்ரமால்ய விபூஷிதா
காந்தா காமப்ரதா வந்த்யா வித்யாதர ஸுபூஜிதா
ஸ்வேதாநநா நீலபுஜா சதுர்வர்க பலப்ரதா
சதுராநந ஸாம்ராஜ்யா ரக்தமத்யா நிரஞ்ஜநா.

ஹம்ஸாஸநா நீலஜங்க்கா ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகா
ஏவம் ஸரஸ்வதீ தேவ்யா நாம்நாமஷ்டோத்தரம் சதம்.

இதி ஸ்ரீ ஸரஸ்வதி சதநாம அஷ்டோத்ரம் சம்பூர்ணம்.