Monday, 6 December 2010

ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம்...

ஓம் அஸ்ய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யா

யாக்ஞாவல்க்ய ருஷி:

அனுஷ்டுப் சந்த:

ஸ்ரீ சதாசிவோ தேவதா

ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தே

ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:


சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்

அபாரம் பர்மோதரம் சதுர்வர்கஸ்ய ஜாதனம்


கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்

சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:


கங்கா தரச்சிர; பாது பாலமர்த்தேந்து சேகர

நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:

க்ராணம் பாது புராராதிர்முகம் பாது ஜகத்பதி:

ஜிஹ்வதாம் வாகீச்வர: பாது கந்தாரம் சசிகந்தர:


ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வதுரந்தர

புஜௌ பூபார ஸம்ஹர்த்தா க்ரௌபாது பினாகத்ருத்


ஹ்ருதயம் சங்கர: பாது ஜடாம் கிரிஜாபதி:

நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிம் வ்யாக்ராஜிநாம்பர:


ஸ்க்திநீ பாது தீநார்த்த: சரணாகத வத்ஸல

ஊரூ மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர


ஜங்கே பாது ஜகத்கர்த்தா குல்பௌபாது கணாதிப:

சரணௌ கருணாஸிந்து: ஸர்வாங்கனி ஸாதாசிவ:


எதாம் சிவபலோபேதாம் ரக்ஷாம் யஸ்ஸுக்ருதீ படேத்

ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவஸாயுஜ்யமாப்னுயாத்


க்ரஹ பூத பிசாசாத்யாஸ் த்ரைலோக்ய விசரந்தி யே

தூராதாசு பாலாயந்தே சிவநாமாபி ரக்ஷணாத்.


அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:

பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.


இமாம் நாராயணன் ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாசிசத்

ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யக்ஞவல்கீய ஸ்ததாலிகத்.


இந்த ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்க ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமந்நாராயணன் சொன்னதை காலையில் தன் சிஷ்யர்களின் மூலம் பலரும் பயனடையச் செய்தார்.

இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள் என்றும் இதனைத் தகட்டில் எழுதி கழுத்தில் கட்டிக் கொள்பவனுக்கு மூன்று உலகமும் வசமாகும் என்று ப்ருஹத் ஸ்தோத்ர ரத்னாகரம் என்ற நூலில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.

எல்லா நன்மைகளைப் பெற்று சிவோஹ நிலையை அடைய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் பண்ணி சிவ அருளைப் பிரார்த்திப்போம்.

'ஓம் தத்ஸத்"


Monday, 8 November 2010

பிறருக்கு நீ செய்வது..

ஒருவன் மலையைக் கடந்து அடுத்த ஊருக்குச் செல்வதற்காக மலை ஏறிக்கொண்டிருந்தான். அப்போது வழியில் ஒரு துறவியும் வந்து சேர்ந்தார். இருவரும் பேசிக் கொண்டே போகும் போது..

அவன் தன்மனக் குறையை துறவியிடம் சொன்னான். யாரும் தன்னிடம் பாசமாகவும், உண்மையாகவும் பழகுவதில்லை. உதவிக்க வருவதில்லை என அதங்கத்துடன் சொல்லிக் கொண்டே வரும் போது அவன் காலை ஒரு கல் தடுக்கியது. உடனே அவன் "ஆ" என்று கத்தினான் அது மலையெங்கும் எதிரொலித்தது.

அப்போது துறவி அவன் தோளில் தட்டி, "நல்லவன்" என்று உரக்கச் சொல்! என்றார். அவனும் "நல்லவன்" என்று சத்தமாகச் சொன்னான். உடனே, மலையின் எல்லா திசைகளிலிருந்தும் "நல்லவன்" என்று எதிரொலித்தது.

உடனே துறவி அவனிடம் "வாழ்க்கையும் அப்படித்தான். பிறருக்கு நீ என்ன செய்கிறாயோ அதுதான் உனக்கும் எதிரொலிக்கும்" என்று விளக்கினார் துறவி.

அன்றிலிருந்து அவன் எல்லோரிடமும் பாசமாகவும் அன்பாகவும் இருந்து உதவிசெய்து வரலானான். அதுபோல் மற்றவர்களும் அவனிடம் பாசமாகவும் அன்பாகவும் இருந்தனர்.


Thursday, 4 November 2010

இனிய தீபத் திருநாளில்..


தீபாவளிக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும் ஒவ்வொரு தெய்வத்தின் கடாட்சம் இருப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அவையாவன..

எண்ணெய் - மகா லட்சுமி.
சியாக்காய் - சரஸ்வதி.
சந்தானம் - பூமாதேவி.
குங்குமம் - கௌரி.
மலர்களில் - ஜீவாத்மா.
தண்ணீர் - கங்கா தேவி.
இனிப்பு பலகாரம் - தன்வந்திரி.
தீபம் - பரமாத்மா.
புத்தாடை - மகாவிஷ்ணு.

புத்தாடை அணியும் போது...

"தீப தேவி மகா சக்தீ சுபம் பவது மே சதா
ஓம்நமோ நாராயணாய வாசுதேவாய ஓம் நமசிவாய||"

என்ற சுலோகத்தை மூன்று முறை சொல்லி மகா விஷ்ணுவை வணங்கி புத்தாடை அணிய வேண்டும்..

தீபம்ஏற்றும்போது...

"ஸுவர்ண வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ
ஸுதான்ய வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ
கல்யாண வ்ருத்திம் குருமே
க்ருஹேஸ்வரீ"

என்ற சுலோகத்தை
மூன்று முறை சொல்லி பக்தியுடன் வழிபட வேண்டும்..



நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்