Monday 21 January 2013

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்

அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு
ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு
நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மங்கலக் குடியினில் மங்களமாய்க்
குடிகொண்டு மங்காத ஒளிவீசும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்
பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்
வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை
அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு
அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்
பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே
 சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ
உன்திருமுகம் காட்டி அருள்புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே
அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே
இச்செகம் போற்றும் கதிரவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கண்ணால் காணும் கடவுள் நீ
கதிரொளி வீசும் கிரகமும் நீ
உன்னால் வாழும் உயிர்களைக் காக்க
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நாளையும் கோளையும் நம்பி வாழும்
இப்புவியில் நன்மைகள் பல புரியவே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி
தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
விழியில் ஒளிதந்து புவியில்
புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
வான் மழை பொழிந்திட பயிர்கள்
விளைந்திட வையகம் தழைத்திட
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்
சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று
விரதமிருந்து செந்தாமரை மலர்களால்
அர்ச்சித்தால் நலம் உண்டாகும்
சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து
சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை
செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து
சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்
சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று
சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை
அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து
வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்